Thursday, March 7, 2013

சிந்தனை செய் மனமே !




இல்லை என்பார் சிலர் , இருக்கு என்பார் சிலர் எல்லையிலா வாதம் எவரைப் பற்றியும் யூகம். ஆமாம் இல்லாத கடவுளுக்கும் இருக்கின்ற கடவுளுக்கும் இடையில் இருந்து அல்லாடும் மனிதர்கள் மத்தியில் சாதாரணமான என்னுள் ஒரு சக்தி உறைகிறது என்று மட்டும் தெரிகிறது. அது அனைவருள்ளும் பூத்துக் குலுங்குகிறது.அந்த சக்தியே என்னை இயக்குகிறது. அதை உயிர் என்பார்களோ அல்லது பிராண வாயு என்பார்களோ அன்றி சுவாசக் காற்று என்பார்களோ எதுவாயினும் சரி.

அந்த ஒன்று இந்தக் காற்றடைத்த பையை விட்டு புறப்பட்டுச் செல்லும் போது இந்த உடலம் சரிகிறது ஆனால் நான் என்னும் ஆணவம் அழிந்து போய் விடுகிறதா?

உடை மாற்றுவதைப் போல என் ஆன்மா உடலத்தை மாற்றிக் கொள்கிறது. ஆனால் ஆன்மாவிர்கு அழிவு உண்டா? அந்த ஆன்மாவின் அறுதி நோக்கம் தான் என்ன ?

என்னுள் தானாய் வியாபித்திருக்கும் சிவம் என்னுள் மட்டுமல்ல அனைவருள்லும் வியாபித்திருக்கிறான். ஆனால் அவனது இருப்பை மாயை எனும் திரை மரைத்துக் கொண்டு இருக்கிரது. அம்மாயை விலக்குவதே பக்தி மார்க்கமாகும். அம்மார்க்கத்திற்கு பிரிவினையை வளர்க்கும் நோக்கம் கிடையாது.

No comments:

Post a Comment