ஆதிமூலம் அடியேன் சரணம்
அன்பே சிவம் என்பர். சிவமே அன்பென்பர். அன்பின் அடித்தளத்தில் அற்புதப் பிரகாசமாய்த் துலங்குவதே அகிலத்தின் ஆதிமூலமாம் எம் கருணைக் கடல் சிவன். அச்சிவனின் பாதக்கமலங்களில் என் சிரந்தாழ்த்தி வணங்கி என் உள்ளத்தில் வீற்றிருக்கும் ஒப்பற்ற மணியாம் சிவனின் மீது யான் கொண்ட பக்தியைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு பரமனின் பக்கமே இதுவாகும்.
பொன்னார் மேனியனே
புலித்தோலை அரக்கிசைத்து
மின்னார் செஞ்சடை மேல்
மிளிர் கொன்றையணிந்தவனே
மண்ணே ! மாமணியே !
மழபாடியுள் மாணிக்கமே !
அன்னே உன்னையல்லால்
வேறு யாரை நினைக்கேனே
Kindness is Lord Siva , Lord Siva is kindness . This page is dedicated to Lord Siva to whom I have submitted myself and wholeheartedly beleive that his teachings and his love will guide me thro difficult times in this world.
No comments:
Post a Comment